தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளா்களைக் கண்டறிவதற்கு விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள், மனிதர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக தரை ஊடுருவும் ரேடார்(GPR) ஆய்வை நடத்தினர்.
இந்த விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் துளையிட்டு தேடியதில் உலோகங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதால், மீண்டும் மற்றொரு இடத்தில் இருந்து ரேடார் ஆய்வைத் தொடங்கவுள்ளனர்.
”இந்த ரேடார் ஆய்வில் மூலம் விஞ்ஞானிகள் பரியந்துரைத்த இடத்தில் சேறு, இடிபாடுகளை அகற்றியப் பின்னர் உலோகங்கள் மட்டுமே கண்டறியப்பட்டது. இதனால் மற்றொரு இடத்தில் இருந்து மீண்டும் ரேடார் ஆய்வை நடத்த விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.