விடாமுயற்சியில் இதை கவனித்தீர்களா?

Dinamani2f2025 02 082f9vdh9o4q2fscreenshot 2025 01 18 165715.png
Spread the love

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

ஆக்சன் திரில்லர் கதையாக உருவான இதில் மாஸ் ஹீரோவாக காட்டிக்கொள்ளமால் சாதாரண கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். கதையாக அவருக்கு நல்ல படமாக அமைந்தாலும் ரசிகர்களிடம் விடாமுயற்சி அதிருப்தியை அளித்துள்ளது.

முக்கியமாக, வசூலிலும் இப்படம் துணிவு படத்தின் முதல்நாள் வசூலைவிட குறைவாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: குட் பேட் அக்லிதான் ஒரே நம்பிக்கை… புலம்பும் அஜித் ரசிகர்கள்!

அதேநேரம், விடாமுயற்சி டிரைலரில் ஒரு காட்சியில் நடிகர் அஜித்தை போன்ற தோற்றம் கொண்ட ஒரு கதாபாத்திரம் நீண்ட தலைமுடியுடன் இருப்பதுபோல் காட்டப்பட்டிருந்தது. அப்போதே, இது அஜித் தானா? இல்லை அஜர்பைஜான் நாட்டு நடிகரா என சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வந்தன.

இந்த நிலையில், இத்தோற்றம் டிரைலரில் இடம்பெற்ற அளவுக்கே படத்திலும் இடம்பெற்றதால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *