விடுதலைப்புலிகள் அமைப்புக்காக ரூ.40 கோடி கையாடல் முயற்சி: இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறை விசாரணை | ed investigate sri lankan woman by over alleged Rs 40 crore fraud attempt for LTTE

1377561
Spread the love

சென்னை: விடு​தலைப் புலிகள் அமைப்​புக்​கு, ரூ.40 கோடி கையாடல் செய்து அனுப்ப திட்​ட​மிட்ட விவ​காரத்​தில் புழல் சிறை​யில் உள்ள இலங்கை பெண்​ணிடம் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

சென்னை புழல் மத்​திய சிறை​யில் இலங்​கை​யைச் சேர்ந்த தமிழ​ரான லட்​சுமணன் மேரி பிரான்​சிஸ்கா (45) அடைக்கப்பட்டுள்ளார். போலி பாஸ்​போர்ட் பயன்​படுத்​தி, சென்னை விமான நிலை​யத்​திலிருந்​து, பெங்​களூரு செல்ல முயன்​ற​போது 2021-ம் ஆண்​டில் தமிழக கியூ பிரிவு போலீ​ஸார் அவரை கைது செய்​தனர்.

அவர் அளித்த வாக்​குமூலத்​தின் அடிப்​படை​யில் அவரது கூட்​டாளி​கள் மேலும் 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இவர்​கள் அனை​வரும் டென்​மார்க் நாட்​டில் தலைமறை​வாக உள்ள விடு​தலைப் புலிகள் அமைப்​பைச் சேர்ந்த உமா​காந்​தன் என்​பவருடன் தொடர்​பில் இருந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து இந்த வழக்கு தேசிய புல​னாய்வு முகமைக்கு (என்​ஐஏ) மாற்​றப்​பட்​டது.

அவர்​கள் மேரி பிரான்​சிஸ்​காவை காவலில் எடுத்து விசா​ரித்​த​போது, விடு​தலைப் புலிகள் அமைப்​புக்கு மும்​பை​யில் உள்ள வங்கி மூலம் ரூ.40 கோடி அனுப்ப முயன்​றது தெரிய​வந்​தது. ஹமிதா ஏ லால்ஜி என்​பவர் மும்​பை​யில் உள்ள வங்கி ஒன்​றில் ரூ.40 கோடி சேமிப்பு பணம் வைத்​திருந்​தார். அவர் இறந்து விட்​ட​தால், அந்த வங்​கிக் கணக்கு கையாளப்​ப​டா​மல் இருந்​தது.

இதை தெரிந்​து​ கொண்ட விடு​தலைப் புலிகள் இயக்​கத்​தைச் சேர்ந்த டென்​மார்க்​கில் வசிக்​கும் உமா​காந்​தன், அந்த பணத்தை தங்​கள் இயக்​கத்​துக்​காக போலி ஆவணங்​கள் மூலம் கைப்​பற்ற முடிவு செய்து இலங்கை தமிழ​ரான மேரி பிரான்​சிஸ்​காவை இந்​தியா அனுப்பி வைத்​திருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இந்​நிலை​யில்​தான் மேரி பிரான்​சிஸ்கா தமிழக கியூ பிரிவு போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்டு புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். தடை செய்​யப்​பட்ட இயக்​க​மான விடு​தலைப் புலிகள் அமைப்​புக்கு வங்​கி​யில் இருந்த ரூ.40 கோடி பணத்தை போலி ஆவணங்​கள் மூலம் அபகரித்து அனுப்ப முயன்ற சம்​பவம் குறித்து தற்​போது அமலாக்​கத் துறை விசா​ரணை​யைத் தொடங்கியுள்ளது.

விசா​ரணை​யின் ஒரு பகு​தி​யாக புழல் பெண்​கள் சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருக்​கும் மேரி பிரான்​சிஸ்​கா​விடம் நேற்று முன்​தினம் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் தனி அறை​யில் வைத்து விசா​ரணை மேற்​கொண்​டனர். வங்​கி​யில் இருக்​கும் பணத்தை அபகரிக்க அனுப்​பியது யார்; ரூ.40 கோடியை அபகரிக்க இந்​தி​யா​வில் யாரெல்​லாம் உதவி​னார்​கள்; போலி ஆவணங்​கள் எப்​படி பெறப்​பட்​டன; வங்​கி​யில் அபகரிக்​கப்​படும் பணத்தை வெளி​நாட்​டுக்கு எப்​படி அனுப்ப திட்​ட​மிட்​டிருந்​தனர்; தடை செய்​யப்​பட்ட இயக்​கத்​துக்கு பணத்தை அனுப்ப முடிவு செய்​யப்​பட்​டதா என்பன உள்​ளிட்ட பல்​வேறு கோணங்​களில் விசா​ரணை மேற்​கொண்​டனர். அதற்கு அவர் அளித்த பதில்​கள் அனைத்​தை​யும் வீடியோ​வாக பதிவு செய்து கொண்​டனர். தேவைப்​பட்​டால்​ மீண்​டும்​ வி​சா​ரிக்​க​வும்​ முடிவு செய்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *