விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமான போக்குவரத் துறையில் 1049 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Dinamani2fimport2f20142f112f222f152foriginal2fexam.jpg
Spread the love

மும்பையில் செயல்பட்டு வரும் சர்வதேச விமான நிலையத்தில் நிரப்பப்பட உள்ள 1049 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 14) கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.

விளம்பர எண். AIASL/05/03/HR/323

பணி: Customer Service Executive

காலியிடங்கள்: 706

சம்பளம்: மாதம் ரூ. 27,450

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கார்கோ, ஏர்லைன் டிக்கெட்டிங் தொடர்பான டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Senior Customer Srvice Executive

காலியிடங்கள்: 343

சம்பளம்: மாதம் ரூ. 38,605

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 33-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் அரசு விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும், இதர பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை வழங்க்கப்படும்

தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் விமான போக்குவரத்து தொடர்பான பணியில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, பிஇடி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை AI Airport Services Limited, Mumbai என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். டி.டி.யின் பின்புறம் பெயர் மற்றும் செல்போன் எண்ணை குறிப்பிடவும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.aiasi.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கூகுள் விண்ணப்ப லிங்கை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வுக்கு வரும் போது தேவையான அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப நகல் மற்றும் டி.டி.யை கொண்டுவர வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.7.2024

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *