த.வெ.க கட்சி நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, `காவல்துறையினரிடம் அனுமதி பெற கடந்த ஒன்றரை மாதமாக போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்துக்கு முன்பாகத்தான் காவல்துறையினரால் அனுமதி வழங்கப்பட்டது’ எனக் கூறியது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
மேலும், த.வெ.க கட்சியினர் அளித்த மனுவில் கோரப்பட்டபடி 4,900 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து செயல்முறை ஆணை வழங்கப்பட்டது.

ஆனால், குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக குறைந்தபட்சம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது. இச்செயலானது உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண்.05-ல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை மீறியதாகும். எனினும், காவல்துறையினரால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு வழங்கப்பட்டது’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.