வித் லவ் விமர்சனம்; அபிஷன் ஜீவிந்த், அனஸ்வராராஜன் நடிப்பில், ஷான் ரோல்டன் இசையில் எப்படி இருக்கு? | With Love Review; How is With Love starring Abishan Jeevinth and Anaswara rajan and with music by Sean Roldan?

Spread the love

பள்ளிக் கால ‘நாஸ்டால்ஜியா’ காதல், இளைஞனான பிறகு மலரும் மாடர்ன் காதல் என்று நகரும் இந்தக் காதல் படைப்பைப் புத்துணர்ச்சியுடன் கொண்டு சென்றிருக்கிறது ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா.

முதல் பாதி காமெடிக்கான களம், இரண்டாம் பாதி எமோஷனுக்கான களம் என நேர்த்தியாகப் பிரித்து கத்தரி போட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் சுரேஷ் குமார்.

டஸ்டர், ஸ்லாம் புக், 1100 மொபைல், ஹீரோ சைக்கிள் எனக் கலை இயக்குநரின் சின்னச் சின்ன வேலைப்பாடுகளும் நம் முன் அழகிய நினைவுகளை மலரச் செய்கின்றன. 

ஷான் ரோல்டன் இசையில், பாடல்களில் ‘ஐயோ காதலே’ பாடல் நம்மைத் துள்ளலோடு ரசிக்க வைக்க, யுவன் சங்கர் ராஜா குரலில் ‘எதுக்குத்தான் இந்தக் காதல்’, ஆதித்யா ஆர்.கே குரலில் ‘மறந்து போச்சு’ ஆகிய பாடல்கள் சார்ட்பஸ்டர்களாக நம்மைத் தொற்றிக் கொள்கின்றன.

காதல் மலரும் தருணம், மோதல், ஃபெயிலியர் எனக் காதலின் 360 டிகிரி கோணத்திற்கும் தனது பின்னணி இசையால் உயிரூட்டியிருக்கிறார் ஷான் ரோல்டன்.

மழித்த முகம், ஒட்டு வைத்த தாடி எனச் செயற்கையாகத் தெரியும் பள்ளி நண்பர்களுக்கான ஒப்பனையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

With Love Review |வித் லவ் விமர்சனம்

With Love Review |வித் லவ் விமர்சனம்

சத்யா – மோனிஷாவின் கதாபாத்திர விவரிப்பு, இருவரும் இணைந்து புரட்டும் அழகிய நினைவுகள் நிறைந்த முதல் காதல் கதை என்பதாகக் கலகலப்புடன் தொடங்குகிறது படம்.

ஸ்லாம் புக், ஃப்ளேம்ஸ் பார்ப்பது, முதிர்ச்சியின்றி பதின் வயதில் காதலுக்காகச் செய்யும் சேட்டைகள் போன்ற விஷயங்களை ஏற்கனவே பல காதல் படங்களில் பார்த்துப் பழகியிருந்தாலும், அவற்றில் ஆங்காங்கே சில ஒன்லைன் காமெடிகளையும், எமோஷனையும் சேர்த்து ரசிக்க வைத்தபடியே நகர்கிறது திரைக்கதை. ‘பாலாஜி’ பெயர் கலாட்டாக்களும் சுவாரஸ்ய ரகளை!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *