1. இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
(a) குத்புதீன் ஐபக்
(b) பாபர்
(c) முகமது கோரி
(d) அக்பர்
2. இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி நிறுவப்பட்ட காலம்?
(a) 12 ஆம் நூற்றாண்டு
(b) 11 ஆம் நூற்றாண்டு
(c) 13 ஆம் நூற்றாண்டு
(d) 14 ஆம் நூற்றாண்டு
3. பன்டகன் என்பதன் பொருள்?
(a) போர்க் கருவி
(b) அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்
(c) வரிவிதிக்கப்படாத நிலம்
(d) ராணுவ பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமை
4. முகமது கோரி இறந்த ஆண்டு?
(a) 1208
(b) 1206
(c) 1205
(d) 1207
5. குத்புதீன் ஐபக் யாருடைய அடிமை?
(a) முகமது கோரி
(b) பாபர்
(c) செங்கிஸ்கான்
(d) அக்பர்
6. அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
(a) பால்பன்
(b) இல்துமிஷ்
(c) பாபர்
(d) குத்புதீன் ஐபக்
7. அடிமை வம்சம் இவ்வாறும் அழைக்கப்பட்டது?
(a) புரட்சிகர அரசு
(b) தன்னிச்சையான அரசு
(c) மாம்லுக் அரசு
(d) மேற்கூறிய எதுவுமில்லை
8. மாம்லுக் எனும் அராபிய சொல்லின் பொருள்?
(a) அரச வம்சம்
(b) ராணுவ பணிக்காக வழங்கப்பட்ட நிலம்
(c) ஒரு வகை நாணயம்
(d) அடிமை
9. அடிமை வம்சத்தினர் இந்திய துணைக்கண்டத்தை எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்?
(a) 84 ஆண்டுகள்
(b) 45 ஆண்டுகள்
(c) 80 ஆண்டுகள்
(d) 60 ஆண்டுகள்
10. டெல்லி சுல்தான்களின் முதல் தலைநகரம் எது?
(a) டெல்லி
(b) ஆக்ரா
(c) சூரத்
(d) லாகூர்
11. லாகூரிலிருந்து தலைநகரை டெல்லிக்கு மாற்றியவர் யார்?
(a) இல்துமிஷ்
(b) முகமது கோரி
(c) குத்புதீன் ஐபக்
(d) பக்தியார் கல்ஜி
12. குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியை கட்டியவர் யார்?
(a) குத்புதீன் ஐபக்
(b) ஷாஜகான்
(c) ஔரங்கசீப்
(d) இல்துமிஷ்
13. கீழை கங்கைச் சமவெளியைக் (பிகார், வங்காளம்) கைப்பற்றும் பொறுப்பை குத்புதீன் ஐபக் யாரிடம் ஒப்படைத்தார்?
(a) பாபர்
(b) இல்துமிஷ்
(c) பக்தியார் கல்ஜி
(d) ரஷியா
14. இந்தியாவிலுள்ள மிகப் பழமையான மசூதி என கருதப்படுவது எது?
(a) ஜமா மசூதி
(b) குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி
(c) மோதி மசூதி
(d) மேற்கூறிய எதுவும் இல்லை
15. குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் யார்?
(a) இல்துமிஷ்
(b) ஜஹாங்கீர்
(c) குத்புதீன் ஐபக்
(d) அக்பர்