ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இறுதிப்போட்டி வரை சென்றதால் வெள்ளிப்பதக்கம் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது .
வினேஷ் போகத் தரப்பில் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, 3வது முறையாக நேற்று (ஆக. 13) ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற கியூபாவைச் சேர்ந்த யுஸ்னெயிலிஸ் குஸ்மன் லோப்ஸ் (அரையிறுதியில் வினேஷ் போகத்திடம் தோற்றவர்) உடன் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என ஆகஸ்ட் 7ஆம் தேதி வினேஷ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், வினேஷ் போகத்தின் மனுவை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, ”100 கிராம் எடை என்ற மிகச்சிறிய எடை வேறுபாடு, ஒலிம்பிக்கின் தெளிவற்ற விதிகள் மற்றும் அவற்றின் விளக்கத்தில் பல கேள்விகளை எழுப்புகிறது.