ஹப்சிகுடா சாலையில் ள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவின் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று, ஆட்டோவின் பின்பக்கத்தில் வேகமாக மோதியுள்ளது. அதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, முன்பக்கம் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது வேகமாக மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில், பேருந்தின் அடியில் ஆட்டோ சிக்கிக்கொண்டு அப்பளம் போல் நொறுங்கியுள்ளது.விபத்து நிகழ்ந்த பகுதிக்கும் மாணவி இறங்க வேண்டிய இடத்துக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 2 கி.மீ.தான் என்ற தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.