”விமர்சனம் செய்தவர்களைக்கூட அரவணைத்து பெரிய கூட்டணியை அமைத்திருக்கிறார் ஸ்டாலின்” – கார்த்தி சிதம்பரம் | congress karthi chidambaram about dmk alliance and stalin

Spread the love

தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “அ.தி.மு.க முன்பு இருந்த நிலையில் இப்போது இல்லை. ஒரு பெரிய கட்சி, நிறைய உறுப்பினர்கள் உள்ளனர். அக்கட்சியின் அடையாளம் சின்னம். அ.தி.மு.க.,வை நான் குறைத்துப் பார்க்கவில்லை. ஆனால், அவர்களிடம், முன்பு இருந்த ஆளுமை இல்லை.

அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால், அவர்களை நாடித்தான் எல்லா அரசியல் கட்சிகளும் வந்து சந்தித்து கூட்டணி அமைத்தனர். அ.தி.மு.க-வின் தலைமையின் கீழ்தான் தேர்தலைச் சந்தித்தார்கள். ஆனால், இன்று அவர்கள் ஒரு முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.

கட்சிக்குள்ளேயே பஞ்சாயத்து என்றால் கூடவும், முடிவெடுக்க வேண்டும் என்றால் கூட டெல்லிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. பா.ஜ.க-வை நாட வேண்டிய நிலையில் அ.தி.மு.க இருக்கிறது. இதனை தமிழக மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர்.

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

எல்லா கட்சிகளு்ம் தங்களைப் பெருமையாவும், துாக்கி உயர்த்திப் பேசுவது தமிழக அரசியலில் வாடிக்கைதான். ஒன்பது முறை எம்.எல்.ஏ-வாக இருந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன், த.வெ.க-வில் சேர்ந்த நிலையில், அந்தக் கட்சியோட பெருமைகளை அவர் பேச வேண்டிய நிலையில் உள்ளார்.

த.வெ.க., முழுமையான அரசியல் கட்சியாக மாறினதா என்றால், நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது ஒரு ரசிகர் மன்றம் போலத்தான் நடக்கிறது. த.வெ.க-வில் உத்தரவு போட்டு, கட்டுப்படுத்தும் வடிவம் கிடையாது. ஒரு மாவட்டத் தலைவரோ, செயலாளரோ அவர் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய அமைப்பு இல்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *