விமர்சிக்கப்படும் சாய் அபயங்கர் டூட் பாடல்!

dinamani2F2025 08 302F9fvkp6os2FCapture
Spread the love

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் புதிய பாடல் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் – இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “டூட்”. மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான ‘ஊறும் பிளட்’ பாடல் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதுவே, சாய் அபயங்கரின் முதல் தமிழ் சினிமா பாடலாகும். இதற்கு முன் வெளியான மலையாளப் படமான பல்டியில் இடம்பெற்ற ஜாலக்காரி பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், சாய் அபயங்கரின் முதல் தமிழ்ப் பாடலான ஊறும் பிளட் ஒன்றுமே புரியாத வகையில் இருப்பதாகவும் இசையை ரசிக்கவும் முடியவில்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிலர், நன்றாகத்தானே இருக்கிறது என்றாலும் பெரும்பான்மை ரசிகர்களுக்கு இப்பாடல் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளதால், சாய் அபயங்கர் இசையில் உருவாகி வரும் மற்ற திரைப்படங்கள் குறித்து கேலியான பதிவுகளையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க: அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *