காயம் காரணமாக விம்பிள்டன் தொடரிலிருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபனில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றவரான அரினா சபலென்கா, முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை எமினா பெக்டாஸுடன் மோதுவதாக இருந்தது.
இந்த நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக விம்பிள்டன் டென்னிஸிலிருந்து அரினா சபலென்கா விலகுவதாக அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எனக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனது தோள்பட்டை காயம் எனக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்குகிறது. என்னால் எல்லாம் செய்ய முடிகிறது. டென்னிஸ் பயிற்சியில் ஈடுபடுகிறேன். ஆனால், பந்தை சர்வீஸ் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது. அது எனக்கு மிகுந்த தொந்தரவை கொடுக்கிறது. அதிக எடைகொண்ட பொருள்களைக் கொடுத்து அதனை தூக்குங்கள் என்றால், தாராளமாக தூக்கி விடுவேன். ஆனால், சர்வீஸ் போட சொன்னால் எனக்கு மிகுந்த வலி ஏற்படுகிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து விட்டேன். அனைத்து விதமான சிகிச்சை பெற்றும் பயனில்லை என்றார்.