வியதிபாத தினத்தன்று இந்த ஆலயத்திற்கு வந்து மனமுருகி வழிபட அவருடைய தோஷம் தீரும் 2025 டிசம்பர் 26 அன்று இந்த புண்ணிய வழிபாடு நடைபெறும் | 2025 thirukozhambam sri konganeshwarar temple parihaaram pooja and worship

Spread the love

எவரொருவர் வியதிபாத தினத்தன்று இந்த ஆலயத்திற்கு வந்து மனமுருகி வழிபடுகிறாரோ அவருடைய தோஷத்தினைத் தாமே ஏற்றுக்கொண்டு விடுவதாக இத்தலத்து ஈசனே உறுதிமொழி கொடுத்துள்ளார். 2025 டிசம்பர் 26 அன்று இந்த புண்ணிய வழிபாடு நடைபெற உள்ளது.

எல்லாம் வல்ல பரம்பொருளாகிய சிவபெருமானைக் குயில் எனும் சிறு பறவை வழிபட்ட சிவ தலங்கள் பல.  இவற்றுள் அம்பிகை பசுவுருவில் சிவபூஜை செய்திட்ட திருக்கோழம்பம் எனப்படும் திருக்குளம்பியமும் ஒன்று. இத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் செய்யப்படும் வியதிபாத வழிபாடு மிகுந்த சிறப்புடையது. குறிப்பாக மார்கழி மாதத்தில் செய்யப்படுகின்ற தனுர்வியதிபாதமானது அதியற்புத பலன்களை அள்ளித் தரவல்லது. இந்த வழிபாடானது  பல ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சி மகாபெரியவர் திருவாய் மலர்ந்தருளிய வண்ணம் இவ்வாலயத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளதும் இங்கே குறிப்பிடத் தக்கது. 2025 டிசம்பர் 26 அன்று இந்த புண்ணிய வழிபாடு நடைபெற உள்ளது.

சந்திரசூரியர்கள் பார்வைக் கலப்பினால் உண்டாவது வியதிபாத யோகம் ஆகும். ஒரு மாதத்திற்கு 27 நட்சத்திரங்கள் அமைவது போல 27 வியதிபாத யோக  நாட்களும்  அமைகின்றன.  யோகம் என்று சொல்லப்பட்டாலும் கூட இந்நாட்கள் பித்ரு வழிபாடுகளுக்கு உரிய தினங்களாகவே அமைகின்றன‌. இக்குறிப்பிட்ட அசுபயோக காலத்தில் பிறந்து விடுபவர்களுக்கு  ஜனனகால ஜாதகத்தில் பித்ரு சாபம், ஸ்த்ரீ சாபம் முதலான தோஷங்கள் ஏற்றப்பட்டு விடுவதும் இயல்பு. இத்தகையவர்கள் எவ்வளவு புண்ணிய காரியங்கள் செய்தாலும் அதற்குரிய பலன்களைக் கூட அனுபவிக்க இயலாமல் வாதனையுடன் தங்கள் வாழ்நாட்களைக் கழிக்கும்படி நேரிடுகிறது. இத்தோஷத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி வியதிபாத வழிபாடு ஒன்றுதான். இத்தகைய வழிபாட்டிற்குரிய தலங்களுள் முதன்மையானது இந்த திருக்கோழம்பம்.

எவரொருவர் வியதிபாத தினத்தன்று இந்த ஆலயத்திற்கு வந்து மனமுருகி வழிபடுகிறாரோ அவருடைய தோஷத்தினைத் தாமே ஏற்றுக்கொண்டு விடுவதாக இத்தலத்து ஈசனே உறுதிமொழி கொடுத்துள்ளார். அதுவும் ஒருமுறை இல்லை.‌”சத்யம்.. சத்யம்..புனஸ் சத்யம்” என்று மூன்று முறைகள் தனது சத்தியவாக்கினை அளித்து இதனைச் சிவபெருமானே உறுதிப் படுத்தியுள்ளார் என்கிறது தலபுராணம்.‌ 2025 டிசம்பர் 26 அன்று இந்த புண்ணிய வழிபாடு நடைபெற உள்ளது.

தனுர்வியதிபாத வழிபாடு

தனுர்வியதிபாத வழிபாடு

இப்படியாக இங்கு வழிபடுபவர்களின் தோஷங்களை ஏற்றுக்கொள்ளும் பெருமானின் உடல் தகிக்கத் தொடங்கி விடுமாம். இதனைப் போக்குவதற்காக புரட்டாசி மாதத்திய வியதிபாத தினத்தன்று ஆயிரெத்தெட்டு கலசதீர்த்தங்கள் கொண்டு சஹஸ்ரகலசாபிஷேகம் செய்து மூலமூர்த்தியின் உஷ்ணத்தினைத் தணிவிக்கின்றனர்.

தொடர்ந்து மார்கழி மாத மகாவியதிபாத தினத்தன்று செய்யப்படும் மகாபள்ளய சமர்ப்பண வழிபாடும் இத்தலத்திற்கென்றே உரிய பிரத்தியேகச் சிறப்பு பெற்றது. 2025 டிசம்பர் 26 அன்று இந்த புண்ணிய வழிபாடு நடைபெற உள்ளது.

மூலவருக்கு முன்பாக பதினொரு மரக்கால் அன்னமும் பதினொரு விதமான பட்சணங்கள், பதினொரு விதமான கனிகள், ஒரு  பானை இளநீர், ஒரு பானை பானகம், ஒரு பானை நீர்மோர் வைத்து சமர்ப்பணம் செய்கின்றனர்.

ஏனைய வியதிபாத நாட்களில் மூலஸ்தானத்து கோகிலேசப் பெருமானுக்கு ஆராதனைகள் செய்யப்படும். ஆனால் மார்கழி மாதத்தில் மட்டும் லிங்கமூர்த்திக்கு வழிபாடுகள் கிடையாது. ஏனென்றால் பள்ளயத்து அன்னக்கலயத்தில் அவர் எழுந்தருளி விடுவதாக ஐதீகம். எனவே எல்லா உபச்சார ஆராதனைகளும் இந்த மஹாபள்ளயத்திற்குத்தான் நிகழ்த்தப்படுகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *