விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் ரோபோக்கள் அல்ல என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது.
இந்தத் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனையடுத்து, அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர்கள் இருவரும் ஓய்வு முடிவை அறிவித்துவிடலாம் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.