விராலிமலை அருகே அரசுப் பேருந்து விபத்து: 20 பேர் காயம்!

Dinamani2f2025 03 202f9sa1tsc02f699e9346 028b 4802 9636 5bd72d94fdec.jpg
Spread the love

விராலிமலை: விராலிமலை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் வியாழக்கிழமை காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் இருந்து கீரனூர் நோக்கி சுமார் 40 பயணிகளுடன் அரசு பேருந்து (கே 9) இன்று காலை சென்று கொண்டிருந்தது.

d583e523 0207 4bbe 9a0e 82de710841a9
காயமடைந்தவர்கள்.

இந்தப் பேருந்து ஆவாரங்குடி பட்டி என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 20 பயணிகள் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *