விருதுநகரில் பட்டாசுத் தயாரிப்புப் பணியில் இருவர் பலியாகினர்.
விருதுநகரில் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தில் சட்டவிரோதமாக பட்டாசுத் தயாரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வீட்டில் வெடி விபத்து ஏற்பட்டு, இருவர் பலியாகினர்.
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 வெடி விபத்துகளில் 16 பேர் பலியாகியுள்ளனர்.