விருதுநகர்: சாத்தூர் எஸ்.ஐ.யின் மனைவி தற்கொலையில் சந்தேகம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் | Virudhunagar: Suspected suicide of Sattur SI’s wife; Relatives block road, refusing to accept body

Spread the love

உடனடியாக காவல்துறையினர் உதவியுடன் இளவரசியின் உடலைக் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து சாத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 வருடங்களே ஆனதால் இளவரசியின் தற்கொலை குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது.

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

இந்நிலையில், இளவரசியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், எஸ்.ஐ. அருணைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி, உயிரிழந்த இளவரசியின் உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே விருதுநகர் – காரியாபட்டி சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்காததால், உறவினர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் சாலை போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *