விருதுநகர்: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம்; சோதனை ஓட்டம் வெற்றி! | Virudhunagar: Srivilliputhur Rajagopuram shines with colorful lights; Test run a success

Spread the love

196 அடி உயரம் உடைய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்திற்கு ஈடு இணை மண்ணுலகத்தில் ஏதுமில்லை என்றும், விண்ணுலகத்தில் உள்ள மேருமலைக்கு ஒப்பானது என்றும் கம்பர் பாடியுள்ளார்.

இத்தகைய பெருமையும் சிறப்பையும் உடைய ஆண்டாள் கோயில் கோபுரம் ஜொலிக்கும் வகையில், சுமார் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காண்பவர் கண்களைக் கவரும் வகையில் பல வண்ண விளக்குகள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம்

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம்

பல வண்ணங்களில் ஜொலித்த கோபுரம்:

இந்நிலையில், ராஜகோபுரத்தில் வண்ண விளக்குகளை மிளிர வைத்து சோதனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோபுரம் பல வண்ண நிறங்களில் ஜொலித்தது. இரவு நேரத்தில் பல வண்ணங்களில் ஜொலித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம் காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *