கடந்த இரண்டு நாள்களாக அவரிடம் பேசவில்லை. அவர் நிச்சயம் என்னிடம் பேசுவார். அப்படி பேசினால் இதுகுறித்து அவரிடம் நிச்சயம் பேசுவேன். நாங்கள் மதிக்கும் மூத்த தலைவர் அண்ணன் செங்கோட்டையன்.
அவர் விஜய்யின் தவெக கட்சியில் இணைகிறாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார், ஏன் எடுத்தார் என்பதை அவரே நிச்சயம் செய்தியாளர் சந்திப்பில் விரைவில் விளக்கிப் பேசுவார்.

எங்களின் அமுமுக கட்சி உடன் கூட்டணி வைக்க நிறையபேர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அது யார் யார் என்று இப்போதைக்கு எங்களால் சொல்ல முடியாது. விரைவில் எங்களின் கூட்டணி யாருடன் என்று முடிவெடுப்போம்” என்று பேசியிருக்கிறார் டிடிவி தினகரன்.