விரைவில் எல்ஐகே கிளிம்ஸ்!

Dinamani2f2024 09 072fcqb9xy5y2fscreenshot202024 09 0720172016.png
Spread the love

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். 

இப்படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

இப்படப்பிடிப்பில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

wikkiofficial 1725708875 3451818688209702176 7549867921

இந்த நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் கிளிம்ஸ் விடியோவை விரைவில் வெளியிடவுள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

இப்படம் சயின்ஸ் பிக்சனுடன் இணைந்த காதல் கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *