விரைவில் ஏடிஎம் மையத்திலிருந்து பிஎஃப் பணம் எடுக்கும் வசதி!

Dinamani2f2025 02 282fpspfvjsq2fc0aa9f76b2399dead1c37c7ba6add8e2.jpg
Spread the love

ஹைதராபாத்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ‘ஈபிஎஃப்ஓ 3.0’ என்ற புதிய முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை நேரடியாக ஏடிஎம்களிலிருந்து பெற அனுமதிக்கும்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த குறித்து தெரிவித்தார். புதிய அமைப்பு பரிவர்த்தனைகளை எளிதாக்க பல டிஜிட்டல் அம்சங்களுடன் வங்கி போன்ற வசதியை இது வழங்கும்.

வரும் நாட்களில் ‘ஈபிஎஃப்ஓ 3.0’ பதிப்பு வரும். வங்கியில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதைப் போலவே, உங்களிடம் உள்ள உங்கள் யுனிவர்சல் கணக்கு எண்ணை வைத்து நீங்கள் இதில் எல்லா வேலைகளையும் செய்ய முடியும்.

இந்த மேம்படுத்தலின் மூலம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உறுப்பினர்கள் இனி அரசு அலுவலகங்களுக்குச் செல்லவோ அல்லது தங்கள் வருங்கால வைப்பு நிதி பணத்தை அணுக தங்கள் நிறுவனத்திடமிருந்து ஒப்புதல்களைப் பெறவோ வேண்டியதில்லை.

உறுப்பினர்கள் இனி அவர்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதைப் போலவே, ஏடிஎம் மூலம் தங்கள் பணத்தை எடுக்க முடியும். அதே வேளையில், சந்தாதாரர்கள் தங்கள் யுனிவர்சல் கணக்கு எண்ணை பயன்படுத்தி தங்கள் கணக்குகளை நிர்வகிக்க முடியும்.

பயனர் அனுபவத்தை மேம்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல சீர்திருத்தங்களை செய்து வருகின்ற நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சேவைகள் குறித்த புகார்கள் குறைந்துள்ளன.

விரைவான செயலாக்கம், பெயர் திருத்தம் மற்றும் எந்தவொரு வங்கியிலிருந்தும் ஓய்வூதியம் பெறுதல் ஆகிய புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: 4 நிறுவனங்களுக்கு ரூ.76.6 லட்சம் அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *