விரைவில் திமுகவில் இணையும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்.! – Kumudam

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சரும் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான பொள்ளாச்சி ஜெயராமனிடம் திமுக விடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநில அரசியல் களம் தீவிரமடைந்துள்ளது. ஆளும் திமுகவுடன் பல அதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர்கள் விரைவில் கட்சி மாறக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பெரிய குழுவே கட்சி மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உடனான கருத்து வேறுபாடுகளால் அதிமுகவின் உட்கட்சிப் பூசல்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. தெளிவான தலைமை இல்லாததால் கட்சி பலவீனமடைந்து வருவதாக சில அதிமுக தலைவர்கள் கருதுகின்றனர்.

திமுகவில் இணைவது தங்களுக்கு அதிக அரசியல் பாதுகாப்பையும், தேர்தலுக்கு முன்பாக சிறந்த வாய்ப்புகளையும் வழங்கும் என அதிமுக குழுவினர் நம்புகின்றனர். இந்த செய்தி, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 இது தொடர்பாக ரகசியமாக சென்னையில் திமுகவின் சீனியர்களிடம் பொள்ளாச்சி ஜெயராமன் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.விரைவில் அவர் திமுகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *