விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு?

Dinamani2f2024 072ff9722ff9 939c 451c 859e F72c57e72e022f11072 Pti07 11 2024 000175b071105.jpg
Spread the love

நாடு முழுவதும் விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1981-ஆம் ஆண்டுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்.1-ஆம் தேதி மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கரோனா பரவல் காரணமாக அந்தப் பணியை மத்திய அரசு ஒத்திவைத்தது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த புதிய தரவுகள் இல்லாததால், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், அரசு துறைகள் கொள்கைகளை வகுத்து மானியங்களை ஒதுக்கீடு செய்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நாடு முழுவதும் விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ஆனால் இந்தக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை’ என்றாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *