விலைகளைக் குறைக்கும் மாருதி சுஸுகி

dinamani2F2025 09 182Fbm94vrrd2Fmaruti suzuki075857
Spread the love

ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, தனது வாகனங்களின் விலைகளை 1.29 லட்சம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதற்காக ரகங்களைப் பொருத்து எங்கள் வாகனங்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன. செப்டம்பா் 22 முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும்.

இந்த மாற்றத்துக்குப் பிறகு எஸ் பிரஸ்ஸோ என்ற ஆரம்பநிலை மாடலின் விலை ரூ.1,29,600 வரை குறையும்; ஆல்டோ கே10 இன் விலை ரூ.1,07,600 வரை, செலரியோ ரூ.94,100 வரை, வேகன்-ஆா் ரூ.79,600 வரை, இக்னிஸ் ரூ.71,300 வரை குறைக்கப்படும்.

பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான ஸ்விஃப்ட் விலை ரூ.84,600 வரையும், பலேனோ விலை ரூ.86,100 வரையும் குறையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *