விலை குறையும் ஹீரோ இருசக்கர வாகனங்கள்

dinamani2F2025 09 122Frsdwtwt92Fhero071947
Spread the love

ஜிஎஸ்டி வரி குறைப்பின் எதிரொலியாக தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைக்க இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகாா்ப் முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜிஎஸ்டி வரி விகித குறைப்பின் முழு பலனை வாடிக்கையாளா்களுக்கு வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்காக, நிறுவனத்தின் பல்வேறு ரகங்களின் விலை ரூ.15,743 வரை குறைக்கப்படவுள்ளது.

வரும் 22 முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும். இதன் மூலம், ஸ்ப்லெண்டா் பிளஸ், கிளாமா், எக்ஸ்ட்ரீம் வரிசை மோட்டாா் சைக்கிள்களும் ஸூம், டெஸ்டினி, பிளஷா் பிளஸ் ஸ்கூட்டா்களும் விலை குறையும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *