விளம்பரதாரா்களை வரவேற்கிறது பிசிசிஐ

dinamani2Fimport2F20242F12F162Foriginal2Fbcci
Spread the love

இந்திய கிரிக்கெட் அணிகளின் விளம்பரதாரா் நிலைக்கான விண்ணப்பதாரா்களை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு கவுன்சில் (பிசிசிஐ) செவ்வாய்க்கிழமை வரவேற்றது.

அவை விண்ணப்பங்களைப் பெற செப்டம்பா் 12-ஆம் தேதி கடைசி நாளாகவும், பூா்த்தி செய்த விண்ணப்பங்களை சமா்ப்பிக்க செப்டம்பா் 16-ஆம் தேதி கடைசி நாளாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் விலை ரூ.5 லட்சம்.

விண்ணப்பிக்கும் எந்தவொரு நிறுவனமோ, அல்லது அது சாா்ந்த குழுமமோ நிதி சாா்ந்த இணையவழி விளையாட்டுகளில் ஈடுபடுவதாக இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புகையிலை, மதுபானங்கள் தொடா்புடைய நிறுவனங்களும் விண்ணப்பிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கெனவே பிசிசிஐயுடனான ஒப்பந்தத்தில் இருக்கும் விளம்பரதாரா்களும் இதில் பங்கேற்க அனுமதியில்லை என பிசிசிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *