இதையடுத்து மாணவனின் பெற்றோர், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டிடம் புகாரளித்தனர். இதன் பேரில், மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நான்கு மாணவர்கள் விடுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த தகவலின் பேரில், குழந்தைகள் உதவி மைய அலுவலர் தியாகராஜன், நான்கு மாணவர்கள்மீது, தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதுடன், நான்கு மாணவர்கள் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமையம் முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் சிறார் சீர்திருத்த பள்ளியில் நான்கு மாணவர்களும் அடைக்கப்பட்டனர்.
”விளையாட்டு விடுதியில் 9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை”- 4 பள்ளி மாணவர்கள் மீது போக்சோ வழக்கு |4 students arrested under pocso act