விழுப்புரத்தில் குடியரசு நாள் விழா கொண்டாட்டம்!

Dinamani2f2025 01 262fkp4ir1322f59e8db38 D828 4d81 B3c4 Db335299a434.jpg
Spread the love

விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக திடலில் குடியரசு நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கோலகலமாகக் கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் சி.பழனி தேசியக் கொடியேற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து அமைதியை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மூவர்ண பலூன்களையும் ஆட்சியர் பறக்கவிட்டார்.

இதைத் தொடர்ந்து திறந்த ஜீப்பில் மாவட்ட எஸ்.பி ப. சரவணனுடன் சென்று அணிவகுப்பை ஆட்சியர் பார்வையிட்டார்.

பின்னர் காவல்துறை பிரிவு, ஆயுதப்படை, ஊர்க்காவல்படை, தீயணைப்புத் துறை, தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் சி. பழனி ஏற்றுக் கொண்டனர்.

விழாவில் பங்கேற்றோர்.

இதைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அவர்களின் வாரிசுகள் அமர்ந்திருந்த பகுதிக்குச் சென்ற ஆட்சியர், அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: சூடான்: மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல் – 70 பேர் பலி!

காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 73 போலீஸாருக்கு முதல்வரின் பதக்கம் வழங்கிய ஆட்சியர், 29 பயனாளிகளுக்கு ரூ. 8.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், பல்துறைகளைச் சேர்ந்த 309 அலுவலர்கள், ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் வனத்துறை அமைச்சர் க. பொன்முடி, எம்எல்ஏக்கள், விழுப்புரம் இரா. லட்சுமணன், விக்கிரவாண்டி அன்னியூர் அ.சிவா, மயிலம் ச.சிவக்குமார், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மிட்டல் எஸ்.பி. ப . சரவணன் மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ், ஊரக வளர்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. அறிவழகன் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *