விழுப்புரம் – திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியளவில் ரத்து | Flyover removal work near Trichy Junction railway station

1335230.jpg
Spread the love

விழுப்புரம்: திருச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில்வே மேம்பாலத்தை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், விழுப்புரம் – திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள பழைய ரயில்வே மேம்பாலத்தை இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் ரயில்கள் பகுதியவில் ரத்து, புறப்படும் இடம் மற்றும் ரயில் நிறுத்தி இயக்கம் மாற்றம் போன்றவை செயல்படுத்தப்பட உள்ளன.

அதன்படி விழுப்புரத்திலிருந்து காலை 5.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் – திருச்சி பயணிகள் ரயில் (வ.எண். 06891) நவம்பர் 6 முதல் 21ம் தேதி வரை பொன்மலை – திருச்சி ரயில் நிலையம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த ரயில் பொன்மலையுடன் நிறுத்தப்படும். எதிர் வழித்தடத்தில் திருச்சியிலிருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் திருச்சி – விழுப்புரம் பயணிகள் ரயில் (வ.எண்.06892) திருச்சி சந்திப்பு – பொன்மலை ரயில் நிலையங்களுக்கு இடையே நவம்பர் 6 முதல் 21ம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் பொன்மலை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.09 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் (வ.எண்.16127) நவம்பர் 6 முதல் 21ம் தேதிவரை வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 10 நிமிடங்களும், நாகர்கோவில் – மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையம் வரை இயக்கப்படும் விரைவு ரயில் (வ.எண்.16352) நவம்பர் 7,10,14,17,21 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 60 நிமிடங்களும் நிறுத்தி இயக்கப்படும்.

கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து காலை 5.50 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி – ஹவுரா அதிவேக விரைவு ரயில் (வ.எண்.12666) நவம்பர் 9,16 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 60 நிமிடங்களும், ராமேஸ்வரத்திலிருந்து காலை 8.40 மணிக்குப் புறப்படும் ராமேஸ்வரம் – புவனேஷ்வர் அதிவேக விரைவு ரயில் (வ.எண்.20895) நவம்பர் 10,17 தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 40 நிமிடங்களும் நிறுத்தப்பட்டு பின்னர் புறப்படும். இதேபோல் வாராணசியிலிருந்து மாலை 4.20 மணிக்குப் புறப்படும் காசித் தமிழ் விரைவு ரயில் (வ.எண்.16368) நவம்பர் 12,19 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தி இயக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *