பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. 6 கட்ட தேர்தல் முடிந்து உள்ள நிலையில் 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 1&ந்தேதி பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்ளிட்ட மொத்தம் 57 தொகுதிகளில் நடைபெற உள்ளன. இறுதி கட்ட பிரசாரம் இன்று(30ந்தேதி) மாலை ஓய்ந்து உள்ளது.
கன்னியாகுமரி
இந்த நிலையில் பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக கன்னியாகுமரி வந்து விவேகானந்தார் பாறையில் தியானம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக பிரதமர் மோடி இன்று மாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் முலமாக புறப்பட்டு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்கினார்.
பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார்
அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்பு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலமாக கன்னியாகுமாரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் முடித்த பின்னர் பிரதமர் மோடி கடல் நடுவே அமைத்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு தனி படகில் சென்றார். அங்கு அவர் தியானத்தில் ஈடுபட்டார்.
இன்று தொடங்கி ஜூன் 1-ந் தேதி மாலை 3 மணிவரை வரை 45 மணி நேரம் பிரதமர் மோடி தியானம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையொட்டி மோடி தியானம் செய்யும் அரங்கில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விவேகானந்தர் மண்டத்தில் தேவையான கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
திருவள்ளுவர் சிலை
ஜுன்1-ந்தேதி தியானம் முடிந்ததும் பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தின் அருகில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்வையிட உள்ளார்.
அப்போது திருவள்ளுவர் பாதத்தில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். இதைத்தொடர்ந்து தனிப்படகு மூலம் கரைக்கு திரும்பும் பிரதமர்மோடி மீண்டும் ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று அங்கிருநது தனி விமானத்தில் டெல்லி செல்ல உள்ளார்.
பாதுகாப்பு
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுமார் 3,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல் முறையாக பிரதமர் மோடி கடலுக்குள் இருக்கக்கூடிய விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்வது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே கட்சி நிர்வாகிகள் யாரும் கன்னியாகுமரிக்கு வரவேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரியில் மோடி படங்கள்….