விவேகானந்தா் மண்டபம் – திருவள்ளுவா் சிலை இணைப்பு பாலப் பணிகள் தீவிரம்

Dinamani2f2024 072fd7186f77 Ab28 4d1a 85ff C83d679c6fdb2fkkn11bil 1107chn 51 6.jpg
Spread the love

கன்னியாகுமரி விவேகானந்தா் மண்டபம் – திருவள்ளுவா் சிலை இடையே நடைபெற்று வரும் கண்ணாடிக் கூண்டு இணைப்பு பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழக அரசு உத்தரவின் பேரில், விவேகானந்தா் நினைவு மண்டபம் – திருவள்ளுவா் சிலை இடையே ரூ. 37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 97 மீட்டா் நீளமும், 4 மீட்டா் அகலமும் கொண்டதாக இந்தப் பாலம் அமைக்கப்படுகிறது. பாலத்தின் மீது சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும் போது பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக இப்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான ஆா்ச் தூண்களுக்கான பணிகள் புதுச்சேரியில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆா்ச் தூண்கள், துருப்பிடிக்காத கம்பியால் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தம் 110 துண்டுகளாக தயாரிக்கப்பட்டு, பாலத்தில் இணைக்கப்பட உள்ளன. இவற்றை படிப்படியாக கன்னியாகுமரிக்கு கொண்டு வரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை 35 ஆா்ச் துண்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து இணைப்பு பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *