விஷசாராயம் குடித்ததில் பலி 13ஆக உயர்வு-55பேருக்கு சிகிச்சை

Kallakurichi
Spread the love

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 40-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்க்கப்பட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை நிலவுகிறது.

 

கள்ள சாராயம் குடித்தனர்

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அது விஷமாகி மாறி உள்ளது. இதனை அறிமால் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயத்தை குடித்து உள்ளனர்.
இதில் நேற்று இரவு பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர்களை குடும்பத்தினர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

13 பேர் பலி

Dead

இதில், கணேசன் மகன் பிரவீன்(29), தர்மன் மகன் சுரேஷ்(46), மண்ணாங்கட்டி மகன் சுரேஷ்(45), கந்தன் மகன் சேகர்(61) வடிவு, தனக்கொடி என்ற மூதாட்டி, சுரேஷ், இந்திரா, மணி, ஆறுமுகம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 13 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பின்னரே இறந்தவர்கள் விஷசாராயத்தை குடித்து இருப்பது தெரிந்தது.

இதேபோல்கள்ளச்சாராயம் குடித்த பலருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் பலர் தனியார் மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மட்டும் 27 பேர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 7 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

55 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

சுமார் 55 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதேபோல் உடல் நலம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் 2 பெண்களின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு கண்பார்வை பறிபோய் உள்ளது. மேலும் காதும்கேட்கவில்லை.

கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் புதன்கிழமை அதிகாலை வரை விற்பனை செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை பகலில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் இரவு பாதிப்புக்குள்ளாகி இன்று உயிரிழந்துள்ளனர்.மேலும், புதன்கிழமை அதிகாலை வரை கள்ளச்சாராயம் குடித்த பலர், பாதிப்புக்குள்ளாகி தொடர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். பலியானவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த கிராமமே மரண ஓலத்தால் நிலைகுலைந்து போய் உள்ளது. பெண்களின் அலுகுரல் சத்தம் அனைவரையும் கண்கலங்க வைத்து உள்ளது.

Kal03
முன்னதாக இன்று மதியம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறும்போது கள்ளச்சாராயத்தால் இறப்பு ஏற்படவில்லை என்று மறுத்தார்.மேலும் அவர் கூறும்போது, “கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்ததாக தவறான தகவல் பரப்பபடுகிறது.வயிற்றுப் போக்கு,வயதான காரணத்தினாலும், வலிப்பு நோயாலும் உயிரிழந்துள்ளனர் என்றார். இது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கலெக்டர்,எஸ்.பி. அதிரடி மாற்றம்

இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் முழுவதும் கூண்டோடு மாற்றப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்வரன்குமார் ஜடாவத் பணியிட மாற்றம் புதிய கலெக்டராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசாரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
கள்ளச்சாராயம் எப்படி விஷமாக மாறியது என்பதை கண்டிறிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Kal02

அதிகாரிகள் விசாரணை

இதுகுறித்து கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார், கூறும்போது, “கள்ளக்குறிச்சி நகரில் கஞ்சா விற்பனையும், கள்ளச்சாராயம் தடையின்றி நடைபெறுகிறது. தற்போது சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் வயிற்றுப் போக்கால் உயிரிழந்ததாகக் கூறுவதெல்லாம் ஏற்புடையது அல்ல.அரசு உடனடியாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அளிக்கவேண்டும். கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் கள்ளச்சாரயம் விற்பனையில் ஈடுபட்டவர்கள் யார்? அவர்களுக்கு அதிகாரிகள், போலீசார் துணையாக இருந்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் உயர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். நாளை சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 10 பேர் பலியான சம்பவம் தி.மு.க.அரசுக்கு நெருக்கடியை கொடுத்து உள்ளது.

சி.பி.சி.ஐ.டி.விசாரணைக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சிக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு விரைந்து வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கேட்டறிந்தனர். இதற்கிடையே கள்ளச்சாராய வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. 24ந்தேதி போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *