விஷசாராய பலி 54 ஆக அதிகரிப்பு-10 பேரின் கண்பார்வை பறிபோனது

Kallakurichi01
Spread the love

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராய மரணம் அனைவரது மனதையும் ரணமாக்கி உள்ளது. பலியானவர்களின் உறவினர்களின் அழுகுரல் அனைவரது மனதையும் கலங்க வைத்து உள்ளது. இதில் தினந்தோறும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்து வருகிறது.

Hospi

 பலி 54 ஆக அதிகரிப்பு

கள்ளசாரயம் குடித்தவர்களின் பலி எண்ணிக்கை இன்று 54 ஆக உயர்ந்து உள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் பரமசிவம், கல்யானசுந்தரம் ஆகியோர் இன்று(22ந்தேதி) காலை பரிதாபமாக இறந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் 100-க்கும்மேற்பட்டோர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிசிச்சைபெற்று வருகிறார்கள். இதில் பலரது நிலைமை இன்னும் மோசமாக இருப்பது வேதனை அடைய செய்து உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி: ஒரே நேரத்தில் தாய், தந்தை இருவரையும் இழந்து தவிக்கும் குழந்தைகள்

கண்பார்வை பாதிப்பு

இதற்கிடையே சிகிச்சையில் இருக்கும் 10 பேர் முழுமையாக கண்பார்வை இழந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பவர்களின் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்களது உறவினர்கள் வேதனையில் துடித்து வருகிறார்கள்.

குறிப்பாக கள்ளக்குறிச்சி நகராட்சியின் 9-வது வார்டில் மட்டும் 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கருணாபுரம் கிராமத்தில் மட்டும் பலரை பலியாக்கிய இந்த சம்பவம், அப்பகுதி முழுவதையும் சோகக்கடலில் தள்ளியுள்ளது.

இதையும் படியுங்கள்:

கள்ளச்சாராய பலி விவகாரத்தில் சி.பி.ஐ.விசாரணை-எடப்பாடிபழனிசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *