விஷால் 35 படத்தில் இணைந்த அஞ்சலி!

Spread the love

நடிகர் விஷாலின் 35-ஆவது படத்தில் நடிகை அஞ்சலி இணைந்துள்ளார்.

மத கஜ ராஜா படத்திற்குப் பிறகு அஞ்சலி விஷால் உடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 35-ஆவது படத்தில் நடித்து வருகிறார்.

சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக ரவி அரசு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகை துஷாரா விஜயன் நாயகியாக நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் இந்தாண்டு இறுதிக்குள் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகை அஞ்சலி தனது எக்ஸ் பக்கத்தில், “மத கஜ ராஜா படத்திற்குப் பிறகு மீண்டும் எனது அருமை நண்பர் விஷாலுடன் இணைவதில் ஆர்வமாக இருக்கிறேன். விஷால் 35-இல் பங்காற்ற ஆர்வத்துடன் இருக்கிறேன். இந்த அற்புதமான அணியுடன் பணியாற்ற காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Actress Anjali has joined actor Vishal’s 35th film.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *