முண்டாசுப்பட்டி, ராட்சசன் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம்குமார். நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் விஷ்ணு விஷாலை இயக்கி ‘ராட்சசன்’ திரைப்படத்தின் மூலம் வெற்றியைக் கொடுத்தார்.
சில மாதங்களுக்கு முன், ராம்குமார் – விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.