வீடு வாடகைக்கு எடுத்து தங்கிய போதைப்பொருள் கும்பலை தேடும் 3 மாநில போலீஸ்  – Kumudam

Spread the love

போதைப்பொருள் கடத்தல், சப்ளையை தடுக்க தமிழக காவல்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி கொண்டு வரப்படும் போதைப்பொருளை பிடிப்பதும் போதைப்பொருள் நெட்வொர்க்கை கண்டறிந்து கைது செய்வதும் என பல்வேறு நடவடிக்கைகளில் மாநில  போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரும் அந்தந்த மாவட்ட காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் பெங்களுருவில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து தமிழகத்திற்குள் கஞ்சா சப்ளையில் ஈடுபட்டு வருவதாக ஆந்திர இளம்பெண்ணின் கூட்டாளிகள்  குறித்து கோவை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காடே ரேணுகா என்பவர் தான் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கோவை போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக தெரிகிறது.  

காடே ரேணுகாவின் கூட்டாளி மகாராஷ்டிரா மாநிலத்தில் கைதான பிறகே இவர் குறித்த விவரங்கள் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் பெங்களூரு போலீசார் காடே ரேணுகா உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். விசாரணையில்ல காடே ரேணுகா கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வீட்டை வாடகைக்கு எடுத்து கூட்டாளிகளை தங்க வைத்து ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சப்ளையில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிய வந்தது. 

பெண் தாதா காடே ரேணுகா போதைப்பொருள் கும்பல் கல்லூரி மாணவர்கள், திரை பிரபலங்களுக்கு சப்ளை செய்வதாக சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழக போலீசாருடன் இணைந்து கர்நாடகா, ஆந்திரா போலீசாரும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். கோவை போலீசாரும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *