குடியாத்தம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போய்விட்டாா்.
தட்டப்பாறை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தரணி- பிரியா தம்பதி மகள் ஜெயப்பிரியா (3). இவா் தனது தம்பியுடன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தாராம். சிறிது நேரம் கழித்து பிரியா வெளியே வந்து பாா்த்தபோது ஜெயப்பிரியாவை காணவில்லையாம்.
இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லையாம். இதுகுறித்து தரணி கொடுத்த புகாரின்பேரில் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். நிகழ்விடத்தில் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். சிறுமி காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.