வீட்டிற்கு நடந்து சென்ற வழியில் யானையிடம் சிக்கிய நண்பர்கள், இருவரும் பரிதாபமாக உயிரிழந்த சோகம்! -gudalur elephant attack update two friends died

Spread the love

இது குறித்து வனத்துறையினர், ” காரக்கொல்லி பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் ரவி, லிங்கராஜ் ஆகிய இருவரும் தேவர்சோலை பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியிருக்கிறார்கள். இவர்கள் நடந்து செல்லும் வழியில் எதிர்ப்பட்ட யானை இரண்டு நபர்களையும் தாக்கியிருக்கிறது. படுகாயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.

யானை தாக்குதல் சம்பவம்

யானை தாக்குதல் சம்பவம்

இந்த துயரம் குறித்து உள்ளூர் மக்கள், ” இந்த பகுதிகளில் கடந்த சில நாள்களாக மாலை 3 மணிக்கெல்லாம் யானை நடமாட்டம் இருக்கிறது. வனத்துறையிடம் தகவல் தெரிவித்தும் அலட்சியமாக இருந்தார்கள். அதனால்தான் இந்த மாதிரியான துயரம் நடந்திருக்கிறது. எங்கள் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு யானைகளிடம் இருந்து நிரந்தரமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *