வீட்டில் வெறித்தனமான நாய்களை வளர்த்தால் நடவடிக்கை

Main Qimg 3e2ba4646bb9b7e08b531729ac42b0d3 Lq
Spread the love

நுங்கம்பாக்கம் பூங்காவில் வளர்ப்பு நாய் சிறுமியை கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நாய்வளர்ப்பவர்கள் மற்றும் அதனை பூங்காவுக்கு அழைத்து வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

பூங்காக்களில் பாதுகாப்பு

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
1. பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பாதுகாப்புகள்
கடுமையாக்கப்படும்.
2. ஒவ்வொரு செல்லப்பிராணி உரிமையாளரும் ஒரு பூங்காவிற்குள் ஒரு நாயை மட்டுமே அழைத்துச் செல்வது கட்டுப்படுத்தப்படும்.
3. பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு செல்லப் பிராணிகள் கயிறுகள் மூலம் கட்டப்பட்டு, அதன் வாய்ப்பகுதியானது மூடப்பட்டிருக்க வேண்டும்.
4. நாய்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்படும். மேலும், செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

செல்லப்பிராணிகளின் உரிமங்கள்

5. தெருநாய்கள் அல்லது கட்டவிழ்த்து விடப்பட்ட நாய்கள் பூங்காவிற்குள் நுழைவது தடுக்கப்படும்.
6. பூங்காவில் விளையாடும் பகுதியில் நாய்கள் நுழைவது தடைசெய்யப்படும். 7. இது தவிர துணை மற்றும் செல்ல நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் உரிமங்கள் சரிபார்க்கப்படும்.
8. செல்லப்பிராணி உரிமையாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் குடிமை முகமைகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் சட்ட நிலைகளுக்கு அப்பால் சென்று, உரிமையாளர்களால் கட்டுப்படுத்தப்படாத விலங்குகளால் ஏற்படும்
பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பொறுப்பை உணர்ந்து

9. பழக்கமான மனிதர்கள் மற்றும் பழக்கப்பட்ட சுற்றுப்புறத்திலும் விலங்குகளின் நடத்தை வேறுபட்டிருக்கும். மேலும், வெளியில் புதிய சூழலில் வரும் போது குழந்தைகள் மற்றும் வயதானவர்களை காணும்போது விலங்குகளுக்கு பயம் மற்றும் பதட்ட உணர்வு ஏற்படும்.
இதனால் விலங்குகளின் நடத்தை முற்றிலும் வேறுபட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு விலங்குளின் உரிமையாளர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் வெளியில் வரும் போது கவனத்துடன் விலங்குகளை கையாள வேண்டும்.
10. வெறித்தனமான நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
11. கால்நடை மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி உரிமையாளர்கள்
நாய்களை பராமரிக்க வேண்டும்.
12. அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் துணை தேவை. ஆனால், சரியான உரிமம் பெற்று அதன் பிறகு இனப்பெருக்கம் செய்து,, விற்பனை செய்ய வேண்டும்.
13. விலங்குகளை வளர்ப்பவர்கள் அதற்கு தேவையான உணவு, இருப்பிடம், தண்ணீர் போன்றவற்றை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *