வீட்டுக்குப் போனதும் நான் கால்ல விழுகணும்! வைரலாகும் அஜித் – ஷாலினி!

dinamani2F2025 08 092Fkuyjotqy2Fpage
Spread the love

நடிகர் அஜித் – ஷாலினி இணையின் புதிய விடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.

குட் பேட் அக்லியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் கார் பந்தயங்களில் பங்கேற்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

அடுத்ததாக, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதால் அதற்காகவும் தயாராகி வருகிறார்.

இந்த நிலையில், வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு நடிகர் அஜித் தன் மனைவி ஷாலினியுடன் பூஜையில் கலந்துகொண்டபோது அஜித் மறுத்தும் ஷாலினி தன் கணவரின் பாதங்களைத் தொட்டு வணங்கினார்.

உடனடியாக அஜித், “வீட்டுக்குப் போனதும் நான் விழுகணும்” எனச் சொல்லி சிரித்தார். இந்த விடியோவை ஷாலினி தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, “ என் இதயத்தை உருக்குகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருவதால் வைரலாகியுள்ளது.

இதையும் படிக்க: ஏகே – 64 படத்தின் வில்லன் இவர்தானாம்!

actor ajith kumar and his wife shalini’s varalakshmi pooja video gets viral

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *