மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உஷா ராணி(45). ஏ.என்.எம் முடித்த இவரோ தற்போது மூலிகை சோப்பு, மூட்டுவலி தைலம், ஹெர்பல் டை போன்ற 18- க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் விற்பனை செய்து, மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ந்து வரும் தொழிலபதிராக திகழ்கிறார்.
இவரின் வெற்றிக்கதையை அறிய நேரில் சென்றபோது, பரப்பரப்பான வேலையிலும் நம்மை பரவசத்துடன் வரவேற்று, நம்மிடையே மகிழ்வுடன் பேச தொடங்கினார்.
“நான் நர்ஸிங் முடிச்ச உடனே எங்க வீட்ல கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. நான் வீட்ட விட்டு பெருசா எங்கையும் வெளிய போனதே கெடையாது. எங்க வீட்ல என்ன வெளியில விட்டதும் கெடையாது. அப்படியே விட்டாலும் யாராவது ஒருதவங்க கண்டிப்பா என் கூடவே துணைக்கும் வந்துடுவாங்க.
காலேஜ் படிச்சப்ப வேலைக்கு போகனும். வெளியில போகனும் அப்டின்ற ஆசையெல்லாம் எனக்கு வந்ததே இல்ல. அதெல்லாம் எனக்கு வந்தது என்னமோ கல்யாணத்துக்கு அப்பறம் தான்.
முதல்ல மகளிர் சுய உதவிக் குழு ஒன்னு என்னோட தலைமையில ஆரம்பிச்சேன். அந்த குழுக்கே எங்க வீட்ல எல்லாம் வேணான்னு தான் சொன்னாங்க. ஆனா, நான் அதையெல்லான் பெருசா எடுத்துகல. இப்ப 13 வருசமா அந்த குழுவ சிறப்பா நடத்திட்டு வரேன்.
அந்த குழுதான் நான் வேலைக்கு போறதுக்கான முதல் படின்னு கூட சொல்லாம். எங்க வீட்டுகாரு வெளிநாட்டில இருக்காரு. எனக்கு ரெண்டு பையன். ஒருத்தன் காலேஜ் படிக்கிறான். இன்னொருத்தன் ஸ்கூல் படிக்கிறான். ரெண்டு பசங்களுக்கும் அவங்க வேலைய அவங்க பாத்துகுற அளவு வளந்துட்டாங்க. பசங்க ரெண்டு பேரும் ஸ்கூல் போயிடட்டா வீட்டுல நான் மட்டும் தனியாத்தான் இருக்கனும்.