வீர தீர சூரனுக்குத் தடை!
படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு பி4யு என்ற நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்காக ஓடிடி உரிமத்தை பி4யு நிறுவனத்துக்கு தயாரிப்பாளர் எழுதிக் கொடுத்துள்ளார்.
ஆனால், ஓடிடி உரிமம் விற்கப்படாமலேயே படத்தை வெளியிடுவதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 27 காலை 10.30 மணிவரை வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கை இன்று காலை விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளனர். விசாரணையில் இருதரப்புக்கும் உடன்பாடு எட்டப்பட்டால், படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி வழங்கும்.
இதனால், வெளிநாடுகளில் இன்று வெளியாகவிருந்த வீர தீர சூரன் திரைப்படத்தின் காட்சிகளும், தமிழகத்தில் காலை 9 மணி காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றம் அனுமதி வழங்கும் பட்சத்தில் பகல் 12 மணிக்கு திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.