படுதோல்வி
இந்த நாடாளுமன்றத் தேர்தல்தான் எம்.ஜி.ஆருக்குத் தோல்வியைக் கொடுத்தது. அந்தத் தேர்தலில் அதிமுக மொத்தமாகவே இரண்டே இடங்களில்தான் வெற்றி பெற்றது. ஒன்று கோபிச்செட்டிப்பாளையம். மற்றொன்று சிவகாசி. அதேசமயம் திமுக – இந்திரா காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அந்தக் கூட்டணியில் இந்திரா காங்கிரஸ் 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

தோல்விக்கானக் காரணம்
அதேபோல, திமுக 16 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வி, எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் அவர் சந்தித்த மிகப்பெரிய தோல்வியாகக் கருதப்படுகிறது.
1980 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவது குறித்து எம்.ஜி.ஆர் பேசியதுதான் இந்தத் தோல்விக்கான முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.