வெங்காயத்திற்கு இறுதி சடங்கு – விவசாயிகள் நுதன போராட்டம்  – Kumudam

Spread the love

தம்னர் கிராமத்தில், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி, இசைக்குழு, தகன மைதானம் என முழு சடங்குகளுடனும் விவசாயிகள் வெங்காயத்துக்கு இறுதிச் சடங்கு நடத்தினர். இது அவர்களின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பையும், அவர்களின் மன உளைச்சலையும் காட்டும் ஓர் உணர்வுப்பூர்வமான தருணமாக மாறியது.

இந்தியாவில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் முக்கியப் பகுதிகளில் ஒன்றான மால்வா – நிமார் பகுதியில், மண்டிகளில் வெங்காயம் கிலோவுக்கு ரூ.1 முதல் ரூ.10 வரை மட்டுமே விற்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். பலருக்கு கிலோவுக்கு ரூ.1-2 கூட வழங்கப்படவில்லை. ஆனால், உற்பத்தி செலவுகள் மட்டும் கிலோவுக்கு ரூ.10-12ஆக இருப்பதால், பெரும்பாலான விவசாயிகள் கடனில் சிக்கியுள்ளனர்.

“வெங்காயம் எங்களுக்கு குழந்தை மாதிரி, எங்களது பயிர் முதலில் கனமழையில் நாசமானது. இப்போது மீதமிருந்த இந்தப் பயிருக்கும் போதுமான விலை கிடைக்கவில்லை. அதனால்தான், வெங்காயத்திற்கு இறுதிச் சடங்கு செய்தோம்” என்று பெண் விவசாயி வருத்தடன் தனது வேதனையை பகிர்ந்து கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *