வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: “சர்வதேச சட்டமீறல்” – ட்ரம்பிற்கு நியூயார்க் மேயர் மம்தானி கண்டனம் | Zohran Mamdani has spoken out strongly regarding the arrest of Nicolás Maduro.

Spread the love

தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளம் மிகுந்த நாடு. எண்ணெய் மூலம் பெறும் லாபத்தை போதை, தீவிரவாதம், ஆள் கடத்தல், கடத்தல்களுக்கு வெனிசுலா பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அதனால் 2019-ம் ஆண்டில் இருந்தே, வெனிசுலா எண்ணெய்க்குத் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் படை வெனிசுலா நாட்டின் மீது பெரிய தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை வெனிசுலா தேசிய அவசர நிலையாகப் பிரகடனப்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், நேற்று அமெரிக்கப் படைகளால் வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றனர்.

நிக்கோலஸ் மதுரோ

நிக்கோலஸ் மதுரோ

நிக்கோலஸ் மதுரோ கை விலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு அழைத்துச் செல்லப்படும் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டிருக்கிறார்.

தற்போது நிகோலஸ் மதுரோ, நியூயார்க்கிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அங்கே அவர் மீதிருக்கும் போதை மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட உள்ளன.

நிகோலஸ் மதுரோவின் சிறைப்பிடிப்பிற்கு ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. மேலும், இந்தத் தாக்குதல் கைது நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் இருந்தே கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *