'வெறும் கைகளால் தொடக் கூடாது'; சென்னையில் பரவும் பறவைக் காய்ச்சல் – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

Spread the love

சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்த பறவைகள் மற்றும் கால்நடைகளை வெறும் கைகளால் தொடக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டிருக்கிறது.

சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தன.

பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்

இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை காஞ்சிபுரத்தில் உள்ள கால்நடை நோய்த் தடுப்பு புலனாய்வுக் குழுவினர், கடந்த மாதத்தில் சேகரித்து போபாலில் உள்ள தேசிய விலங்கள் நோய் கட்டுபாட்டு ஆய்வு நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர்.

இந்த சோதனையின் முடிவில் பறவைகளுக்கு H5N1 வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மக்களுக்கு தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சில அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது. அதன்படி

* சில உயிரிழந்த பறவைகளை வெறும் கைகளால் தொடக் கூடாது.

* உயிரிழக்கும் பறவைகள் மற்றும் பசு மாடுகளை எரிக்க வேண்டும் அல்லது ஆழமாக குழிதோண்டி புதைக்க வேண்டும்.

* கோழிப் பண்ணைகளுக்குள் வெளி நபர்களை அனுமதிக்கக் கூடாது.

பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்

* ஒரு கோழிப் பண்ணையில் வேலை செய்பவர் பல பண்ணைகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

* பிற மாநிலங்களில் இருந்து கோழிகளையோ, கோழி இறைச்சியையோ கொண்டுவரக்கூடாது.

* தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தி இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *