வெளியானது விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் டிரைலர்!

dinamani2F2025 09 082Fiqrgqztn2Fva25
Spread the love

விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அண்மையில் வெளியான மார்கன் படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து, பிச்சைக்காரன் படத்தின் 3-ஆம் பாகத்தை இயக்கி, நடிக்க உள்ளதாக விஜய் ஆண்டனி முன்னதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே, விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவாகியுள்ள சக்தித் திருமகன் படத்தை, விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார். விஜய் ஆண்டனியே இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அரசியல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், விஜய் ஆண்டனி கேங்ஸ்டராக நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சக்தித் திருமகன் படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சக்தித் திருமகன் திரைப்படம் வரும் செப். 19 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியாவில் 79 ஆயிரம் கோடிக்கு ஐபோன் விற்பனை! டிம் குக்கிடம் கொந்தளித்த டிரம்ப்!

The team of Vijay Antony’s film Sakthi Thirumagan has released the trailer.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *