பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், கர்ப்பப்பை வாயில் (Cervix) சில மாற்றங்கள் நிகழக்கூடும். இதன் காரணமாகக் காப்பர்-டியின் நூல் சற்றே நீளமாகத் தெரிவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய சூழலில் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவர் உங்கள் கர்ப்பப்பையைப் பரிசோதித்துவிட்டு (Pelvic Examination), காப்பர்-டி சரியான நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்வார்.
காப்பர்-டி அதன் இடத்திலிருந்து முழுமையாக நகர்ந்திருந்தால், அதனை அகற்றிவிட்டுப் புதிய கருத்தடை சாதனத்தைப் பொருத்த வேண்டியிருக்கும். ஒருவேளை அது சரியான இடத்தில்தான் உள்ளது… ஆனால், அதன் நூல் மட்டுமே நீளமாக இருக்கிறது என்றால், மருத்துவர் அந்த நூலைச் சற்றே வெட்டி (Trim) சரி செய்வார். அதன் பிறகு காப்பர்-டி அதே நிலையில் தொடர்வதில் சிக்கல் இருக்காது.

கடுமையான வயிற்றுவலி இருந்தாலோ… தாமதிக்காமல் மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுங்கள்.
இவற்றைத் தாண்டி, சில தருணங்களில் நீங்கள் அவசரமாக மருத்துவரை அணுக வேண்டியிருக்கலாம். அதாவது, உங்களுக்குக் கீழ்க்காணும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
கருப்பைத் தொற்று (Pelvic Infection) ஏற்பட்டாலோ, வழக்கத்திற்கு மாறான மற்றும் துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல் இருந்தாலோ,
கடுமையான வயிற்றுவலி இருந்தாலோ… தாமதிக்காமல் மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுங்கள். மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, தொற்று மேலே பரவாமல் தடுக்கவும், பாதிப்புகளைத் தவிர்க்கவும் காப்பர்-டியை அகற்றிவிட்டு உரிய சிகிச்சையை அளிப்பார். எனவே, இதில் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.