வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் தனியார் மதுபானக் கூடம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலையில் நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பழைய திருமண மண்டபத்தில் நவீன வசதிகளுடன் தனியார் மதுபானக் கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனருகே, பள்ளிக் கூடம், தபால் அலுவலகம், ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில், தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் போன்றவை உள்ளன. சுற்றிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 50-க்கும் அதிகமான கடைகள் உள்ளன.