வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி!

Dinamani2f2025 03 292fx4r5o08x2fap25087602311524.jpg
Spread the love

தெற்கு டெக்சாஸ்-மெக்சிகோவில் ஏற்பட்ட புயல், மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.

தெற்கு டெக்சாஸ்-மெக்சிகோவின் எல்லைப்பகுதியில் கடும் புயல் காரணமாக பெய்த மழை வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கினர். வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

வடகிழக்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் 20 முதல் 31 செ.மீ.வரை மழை பெய்ததாகக் கூறினர். இந்தப் பகுதியில் மட்டும் சுமார் 640 இராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

சில பகுதிகளில் 53 செ.மீ.வரை மழை பெய்ததாகவும் கூறுகின்றனர். வெள்ளத்தில் பலரின் வீடுகளும், வாழ்விடங்களும் மூழ்கியதால், நூற்றுக்கணக்கானோர் நிவாரண முகாம்களைத் தேடி அலைகின்றனர். இந்த நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *